ETV Bharat / city

3 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை... பொதுமக்கள் அவதி

author img

By

Published : Aug 27, 2022, 7:56 AM IST

ஈரோட்டில் 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பமான சூழ்நிலை தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் கனமழை

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக பெரியார் நகரில் 10க்கும் மேற்பட்ட கடைகளிலும், சக்தி சாலை பாரதி நகரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளன. மேலும், சாலையில் தேங்கிய மழை நீரின் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

இதையும் படிங்க: பரந்தூரில் ஏர்போர்ட் வர காரணம் எம்.பி. கனிமொழி தான்... சீமான் பகிரங்க குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.