ETV Bharat / city

கரோனா கட்டுப்பாடுகள் - ஈரோட்டில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

author img

By

Published : Aug 14, 2021, 5:30 PM IST

ஈரோட்டில் கரோனா தொற்றின் 3ஆவது அலையை கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு
கடைகள் அடைப்பு

ஈரோடு: கரோனா தொற்றின் 3ஆவது அலையை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய சாலைகளில் கடைகள் அடைப்பு

அதன்படி கடந்த 9ஆம் தேதி முதல் பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் மாலை 5 மணியுடன் அடைக்கப்பட்டு வருகிறது.

வார இறுதி நாள்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், அருங்காட்சியகங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் முக்கிய வீதிகளிலுள்ள கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆக. 14) ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி. பூங்கா, காவிரி சாலை ஆகிய பகுதிகளிலும், அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு முழுமையாக அடைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 23ஆம் தேதி வரை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட கடைகளைத் தவிர மீதி கடைகளைத் திறக்கும் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: நாமக்கல்லில் மாலை 5 மணிக்கு பிறகு அடைக்கப்பட்ட கடைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.