ETV Bharat / city

குறைந்தது நீர் வரத்து.. நிறுத்தப்பட்ட பவானிசாகர் அணையின் உபரிநீர் வெளியேற்றம்

author img

By

Published : Aug 18, 2022, 3:43 PM IST

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரானது நிறுத்தப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் தொடர்மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு, மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், அணையின் நீர்மட்ட உயரம் கடந்த ஆக.5ஆம் தேதி 102 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சராசரியாக 15 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து இன்று (ஆக.18) காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சி ஆகவும்; நீர் வரத்து 3533 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் கால்வாயில் 2100 கன அடியும்; பவானிஆற்றில் 1300 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

கடந்த 11 நாள்களில் 10 டிஎம்சி உபரிநீர் வரத்தாகவும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டதாகவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சீனாவில் ஒரே இரவில் பேய்மழை... 16 பேர் உயிரிழப்பு... 36 பேர் மாயம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.