ETV Bharat / city

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழர் பேரவையினர்!

author img

By

Published : Dec 24, 2020, 9:22 PM IST

ஈரோடு : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்ட திருத்தம் 2020 ஆகியவற்றைத் திரும்பப் பெறக் கோரி சத்தியமங்கலம் கோவை சாலையில் ஆதித் தமிழர் பேரவையினர் இன்று (டிச.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழர் பேரவையினர்!
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழர் பேரவையினர்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) சட்டம், விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம் 2020 ஆகிய மூன்றையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். குறிப்பாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது.

கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 29 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை. இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித் தமிழர் பேரவையினர்

அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சத்தியமங்கலம் கோவை சாலையில் ஆதித் தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அடித்தட்டு மக்களை பாதிக்கும் கேஸ் விலை உயர்வு குறைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க : '30 வருஷமா போராடுறோம் ஒன்னும் நடக்கல' - வயல்கள் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.