ETV Bharat / city

அதிமுக பிரமுகர் தோட்டத்தில் போலி உரம் தயாரிப்பு

author img

By

Published : Dec 20, 2021, 7:43 PM IST

பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் தோட்டத்தில் பொட்டாசியம் கலப்பட உரம் தயாரித்த குடோனுக்கு அலுவலர்கள் சீல்வைத்தனர்.

போலி உரம் தயாரிப்பு
போலி உரம் தயாரிப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகேவுள்ள குரும்பபாளையம் ஊராட்சியில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணனின் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவராஜ் என்பவர் கோலப்பொடி தயாரிக்க வாடைக்கு குடோன் அமைத்துள்ளார்.

இதையடுத்து பொள்ளாச்சி வட்டாட்சியர் அரசகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் குடோன் தாலுகா காவல் நிலைய காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆய்வுசெய்தனர். கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்து விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வேளாண்மைத் துறை அலுவலருக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாண்மை அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். பின்னர், போலியாகத் தயாரித்த உரத்தை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

போலி உரம் தயாரிப்பு

மேலும், குடோன் உரிமையாளர் வாழைகொம்பு நாகூரைச் சேர்ந்த தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், குடோனுக்குச் சீல்வைக்கப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த தேவராஜ் தலைமறைவாக உள்ளதால் காவல் துறையினர் அவரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கடிதம் எழுதிவைத்து மாணவி தற்கொலை: கல்லூரி மாணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.