ETV Bharat / city

மதத்தின் பெயரால் வாக்கு வங்கி; இஸ்லாமியர்கள் மாற வேண்டும் என சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு!

author img

By

Published : Apr 13, 2019, 9:54 PM IST

கோவை: மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கோவை பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருக்கும் இஸ்லாமியர்கள் மாற வேண்டும் -சிபி ராதாகிருஷ்ணன்


கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் டவுன்ஹால், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு பிடித்த அணியாக திமுக தலைமையிலான அணி இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பிரதமர் வேட்பாளரை கூட அடையாளம் காட்ட முடியாத திமுக கூட்டணியில் 120 கோடி மக்களை எப்படி வழி நடத்துவார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், மதம் - மொழி - சாதி ஆகியவற்றைக் கடந்து வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Intro:மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என கோவை பாஜக வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


Body:கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் டவுன்ஹால், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் வாக்காளர்களிடம் பேசியவர் இஸ்லாமியர்களுக்கு பிடித்த அணியாக திமுக தலைமையிலான அணி இருப்பதாக தெரிவித்தார் ஆனால் பிரதமர் வேட்பாளரை கூட அடையாளம் காட்ட முடியாத திமுக கூட்டணியில் 120 கோடி மக்களை எப்படி வழி நடத்துவார்கள் என கேள்வி எழுப்பினார் பிரதமராக நரேந்திர மோடி வேண்டாம் என்பது ஜனநாயகம் எனக்கூறிய அவர் இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் விலைவாசி உயர்வு மின்வெட்டு இல்லாத ஐந்தாண்டு கால ஆட்சி தந்த மோடிக்குப் பதிலாக யார் வேண்டுமென கேள்வி எழுப்பினர் மத சார்பற்ற அணி என போலி மதசார்பின்மை பேசுவதாகவும் இறை நம்பிக்கை உள்ள இஸ்லாமியர்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் இடம் தேர்தலுக்கு தேர்தல் மயங்குபவர்கள் ஆக இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார் மதத்தின் பெயரால் வாக்கு வங்கியாக இருப்பதை இஸ்லாமியர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மதம் மொழி சாதி கடந்து வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வைப்போம் என திமுக தலைவர்களில் கூறுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வையகம் போகிறான் என சொன்னது போலத்தான் தெரிகிறது என கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.