ETV Bharat / city

8 வழிச்சாலை திட்டம் தேவையா? சி.பி.ராதாகிருஷ்ணனின் ருசிகர பதில்

author img

By

Published : Apr 15, 2019, 8:22 PM IST

கோவை: எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த கேள்விக்கு கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதிலளித்துப் பேசியுள்ளார்.

Coimbatore BJP Candidate CP radhakrishnan press meet

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'ஜெயிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் ஜிஎஸ்டியால் தொழில் பிரிவு மூடப்பட்டது போலவும், தொழில் வளர்ச்சி இல்லாதததைப் போலவும் பொய்யான தோற்றத்தை கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சியினர் சொல்லி வருகின்றனர்' என தெரிவித்தார்.

எட்டு வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'ஒரு நாளைக்கு எவ்வளவு வாகனம் பதிவு செய்யப்படுகின்றது என பாருங்கள், பிறகு முடிவு செய்யுங்கள்... எட்டு வழிச்சாலை திட்டம் தேவையா, இல்லையா? என்று' என பதிலளித்தார்.

எட்டு வழிச்சாலைத் திட்டம் -சி.பி.ராதாகிருஷ்ணன்
சு.சீனிவாசன்.       கோவை


ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ரத்து செய்வது போல் கம்யூனிஸ்டுகளும் எதிர்கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக பாஜக கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அதே சமயம், 8வழிச்சாலை, நீட் போன்ற விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.



கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது ஜெயிப்பதற்கு ஓன்றுமில்லை என்பதால் ஜி.எஸ்.டியால் தொழில் பிரிவு மூடப்பட்டது போலவும் தொழில் வளர்ச்சி இல்லாத்தை போலவும் பொய்யான தோற்றத்தை கம்யூனிஸ்ட் உட்பட எதிர் கட்சியினர் சொல்லி வருகின்றனர் என தெரிவித்தார். கடந்த மூன்றாண்டுகளில் தொழில் முனைவோர் 40 ஆயிரம் பேரும், சேவை என்ற அடிப்படையில் 42 ஆயிரம் மேலும்  புதிதாக பதிவு செய்து  தொழிலை துவங்கி இருக்கின்றனர் என தெரிவித்தார். ஜி.எஸ்.டியை பொருத்த வரையில் தொழில் துறையினரின் கோரிக்கைகள் ஓன்றன் பின் ஒன்றாக சரி செய்யப்பட்டு வருகின்றது எனவும் ,  நடைமுறை சிக்கல்கள் களையபட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் மக்களை குழப்பி வரும் கம்யூனிஸ்டுகள் ஜி.எஸ்.டி வரியை எடுத்துவிடுவதை போல பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். தொழில் வளர்ச்சியே இல்லை என்றால் இரு புதிய கொடிசியா பார்க்குகள் எப்படி வர முடியும் என கேள்வி எழுப்பிய அவர், வெட் கிரைண்டருக்கு, இருந்த 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்தது கம்யூனிஸ்டுகள் அல்ல எனவும்  அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் நான் ஆகியோர் இணைந்து ஜி.எஸ்.டி வரியை  குறைக்க நடவடிக்கை எடுத்தோம் எனவும் டெக்ஸ்டைல தொழிலில் 18 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டியை 5 சதவீதமாகவும் குறைத்தோம் எனவும் தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீத ஜி்எஸ்டி வரியினை டெக்டைல்களுக்கு குறைத்ததை  போல 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார். யாருக்குமே கிடைக்காத வஙகி கடன்கள் இப்போது வழங்கப்படுவதாகவும் முத்ரா வங்கி மூலம் 56680 பேருக்கு 865 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். சிறு, குறு தொழில்களுடன் இணைந்து மத்திய அரசு இராணுவ காரிடரை ஏற்படுத்தி கொடுத்து இருக்கின்றது எனவும் இதன் மூலம் உலக தரம் வாய்ந்த  இராணுவ தளவாடங்களை தயாரிக்கும் மையமாக கோவை மாறும் எனவும் தெரிவித்தார். சிறு, குறு தொழில் இல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  நினைத்து பார்க்க முடியாத ஒன்று என கூறிய அவர், மோடியின் ஆட்சியில் இவை பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தற்போது மூடப்பட்டதாக சொல்லபபடும் ஆலைகள் , மூடப்படுவற்கான அடிப்படை காரணம்  திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 13 மணி நேர மின்வெட்டு என கூறினார்.ஜெனரேடரடருக்கு டீசல் வாங்கி அதனால் நஷ்டப்பட்டவர்கள் ஏராளம் எனவும் தெரிவித்தார். தமிழகம் மோடியின் ஆட்சியில் எங்கும் புறக்கணிக்கப்பட வில்லை எனவும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட 10 ஸ்மார்ட் சிட்டிகள் வழங்கப்பட வில்லை எனவும் தெரிவித்த அவர், கோவை விமான நிலையம் விரைவில் பிரமாண்டமான விமான நிலையமாக உருவெடுக்கும் எனவும், அப்படி உருவெடுத்தால் ஏற்றுமதி தொழிலில் மேலும் சிறப்பாக செயல் பட முடியும் எனவும் தெரிவித்தார். கோவையில் இருந்து சென்னை, பெங்களுர், திருவனந்தபுரம், ஐதராபாத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். சிறு,குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டதாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கோவைக்கு தொழில் கூடங்களுக்கு ஆட்கள் தேவை என்றுதான் சொல்கின்றார்களே தவிர ஆட்கள் தேவையில்லை என்று எங்கும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும்  சிறுகுறு தொழில் துறை தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டதாக சொன்னது என்பது தொழில் முனைவோர் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆகிவிட்டது, நவீனமயமாக்கப்படுவதற்கான மனநிலை இல்லாதது, தொழிலை மகன், மகள் ஆகியோர் பார்க்க முடியாதது போன்றவற்றால்  நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிதின்கட்காரி கூறி இருப்பது பா.ஜ.கவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சி.பி.ஆர், ஒரு நாளைக்கு எவ்வளவு வாகனம் பதிவு  செய்யப்படுகின்றது என பாருங்கள், பிறகு முடிவு செய்யுங்கள், 8 வழி சாலை திட்டம் தேவையா?  இல்லையா என்று தெரிவித்தார். மேலும் நாட்டை நேசிப்பவன் நாடு முன்னேற வேண்டும் என்றுதான்  விரும்புவான் எனவும் வெற்றி தோல்விகளை பற்றி கவலை பட மாட்டான் எனவும் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரம் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, நீட் தேர்வால்  சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள்  முறையாக பயிற்சி பெற்று  குறைந்த கட்டணத்தில் தேர்ச்சி பெற்று வருவதை காணமுடிகின்றது எனவும், சில பேர் திருப்பி  திருப்பி ஒன்றை சொல்வதால் பொய் உண்மையாகி விடாது எனவும் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி எனவும், காவிரி நதிநீர் ஆணையத்தை தூக்கி  ஏறிவோம் என காங்கிரஸ் கட்சி  தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது எனவும் யார் துரோகி எனவும் கேள்வி எழுப்பினார். 8 வழி சாலை, நீட் விவகாரம் பா.ஜ.கவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா ? ஏற்படுத்தாதா? என்று மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, கேள்வி கேட்பது உங்கள் உரிமை, பதில் சொல்வது என் உரிமை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் என மழுப்பலாக கூறிவிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.