ETV Bharat / city

ஆலாந்துறையில் டிராக்டர் ஓட்டிய சிறுவன்: வாகன ஓட்டிகள் அச்சம்

author img

By

Published : Nov 7, 2019, 8:05 PM IST

கோவை: ஆலாந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவர் ஒருவர், சக நண்பர்களை அழைத்துக்கொண்டு டிராக்டர் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி, வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

school boy drive

மோட்டார் வாகன சட்டப்படி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பது விதி. ஆனால் ஒரு சில பள்ளி மாணவர்கள், ஓட்டுநர் உரிமமின்றி பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவர் ஒருவர், விவசாயத்துக்கு பயன்படுத்தும் டிராக்டரை ஓட்டிச் சென்றது மற்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் டிராக்டரை ஓட்டிவந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

school boy drive
school boy drive

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அலுவலர்கள் உடனடியாக தணிக்கை செய்து விபத்து நடைபெறுவதற்கு முன்பாக இதுபோன்று வாகனங்கள் இயக்கும் சிறுவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

school boy drive
school boy drive

மேலும், அந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால், இதுபோன்று 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் ஓட்டுநர் உரிமமின்றி கனரக வாகனங்களை அபாயகரமான முறையில் இயக்குவதாகவும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்கும் போலீசார், இதை கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Intro:கோவை ஆலாந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன் தனது சக நண்பர்களை அழைத்துக்கொண்டு டிராக்டரில் பல கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள்


Body:மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்பது விதி ஆனால் இதனை மீறி ஒரு சில பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் செல்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவன் ஒருவன் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரை அசால்டாக ஓட்டிச் சென்றது மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் தனது இரு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு பல கனரக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் டிராக்டரை அந்த சிறுவன் ஓடிவந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உடனடியாக இந்த பகுதியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தணிக்கை செய்து விபத்து நடைபெறுவதற்கு முன்பாக இதுபோன்று வாகனங்கள் இயக்கும் சிறுவர்கள் கட்டுப்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் இந்தப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் இதுபோன்று 18 வயது பூர்த்தியாகாத பல சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி கனரக வாகனங்களை அபாயகரமான முறையில் சாலையில் இயக்குவதாகவும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் துரத்தித் துரத்திப் பிடிக்கும் போலீசாரும் இதனை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.