ETV Bharat / city

எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்கு துரோகம் - அதிமுக மீது திருமா பாய்ச்சல்

author img

By

Published : Dec 14, 2019, 2:55 PM IST

சென்னை: பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்குத் துணைபோவதால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு அதிமுக துரோகம் செய்துகொண்டிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

protest
protest

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் சட்டமாக்கப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், இச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ” பெரும்பான்மை எனும் பெயரில் மோடி அரசு மிகவும் மோசமான ஃபாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கூறுபோட்டு விட்டார்கள். அதேபோல் இந்திய நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விருப்பம்போல் தீர்ப்புகளை பெறும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில்தான் அயோத்தி தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். அது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதைவிட, சாஸ்திரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்தது என்பதை நாடு அறியும். இப்போது அவர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

அடுத்ததாக, இஸ்லாமியர்களை முற்றிலும் இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கவேண்டும். இந்த தேசத்தை இந்துக்களுக்கான ஒரே தேசமாக பிரகடனப்படுத்த வேண்டும். அதனால்தான் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள் கொந்தளித்து கொண்டிருக்கின்றன. இது இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமை என்பதையும் தாண்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - போராட்டக்களமாக மாறிய பல்கலைக்கழகம்!

மாநிலங்களவையில் அதிமுக இம்மசோதாவிற்கு எதிராக வாக்களித்திருந்தால் இதை நிறைவேற்றாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், மக்கள் நலனை பொருட்படுத்தாது அதிமுக எடுத்த நிலைப்பாட்டால், இன்றைக்கு இந்த மோசமான சட்டம் நிறைவேறியுள்ளது. இது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் செய்யும் துரோகம் “ என்றுக் கூறினார்.

தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

இதையும் படிங்க: குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின் கைது

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


Body: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்


பெரும்பான்மை எனும் பெயரில் மோடி அரசு மிகவும் மோசமான பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது வெளிப்படையான வெறுப்பு அரசியலை திட்டமிட்டு வருகிறது

மோடி அரசு அவர்களின் நீண்ட கால கனவு திட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கான சிறப்புத் தகுதியை ரத்து செய்வதே பெரும்பான்மை என்ற பெயரால் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கூறுபோட்டு விட்டார்கள் அதே போல் இந்திய நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விருப்பம்போல் தீர்ப்புகளை பெறுகிற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் அதனடிப்படையில் அயோத்தி தீர்ப்பை பெற்றிருக்கிறார்கள் அது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதைவிட சாஸ்திரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்தது என்பது நாடு அறியும் அவர்களின் நீண்ட கால கனவு திட்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான ஏதுவாக இந்த தீர்ப்பை பெற்றுவிட்டார்கள் இப்போது இஸ்லாமியர்களை முற்றிலும் இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் அவர்களை ஜனநாயக உரிமைகளை பறிக்கப்படவேண்டும் இந்த தேசத்தை இந்துக்களுக்கு மட்டுமே ஒரே தேசமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்கிற நாள் கனவு திட்டத்தை குடியுரிமை திருத்த சட்டத்தை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறார்கள் இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு மக்கள் போராட்டமாக இப்போது கொந்தளித்து இருக்கிறது ராணுவத்தினரை கொண்டு ஒடுக்குமுறைகளை ஏற்றுகிறார்கள் துப்பாக்கி சூட்டில் இதுவரையில் மூவர் பலியாகி இருக்கிறார்கள் கேரளாவிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு

பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2011 டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது இஸ்லாமியர்களுக்கு இல்லை ஈழத்தமிழர்களுக்கும் இல்லை என்று வெளிப்படையான முடிவை எடுத்து அதை சட்டத்தின் பெயரால் இங்கே மக்கள் மீது திணிக்கிறார்கள் இது மிக மோசமான பாசிச போக்கவும் மதத்தின் பெயரால் நாட்டை மக்களை கூறு போடும் முயற்சியில் மதவாத அரசு மோடி அரசு ஈடுபட்டு வருகிறது

இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்வோர் எங்களுக்கு மக்கள் அதிகாரம் தந்திருக்கிறார்கள் என்று மக்களவையில் தருவதோடு பேசுகிற போக்கை இன்றைக்கு நாம் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது எதை வேண்டுமானாலும் செய்வோம் என முடிவு வேண்டுமானாலும் எடுப்போம் என்று நான்கரை ஆண்டுகள் எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது தட்டிக்கேட்க முடியாது என்ற ஆணவத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஆட்சியாளர்களின் பேச்சும் போக்கும் அமைந்திருக்கிறது

இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்கொடுமை என்பதையும் தாண்டி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கு எதிராக மக்களுக்கு எதிராக இந்த தேசத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு முடிவு

மாநிலங்களவையில் அதிமுக எதிராக வாக்களித்து இருந்தால் இந்த குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்திருக்க முடியும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் தான் 125 வாக்குகளை பெற்று 20 வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவை வெற்றி பெற்றது

அதிமுக தங்களுடைய கட்சி நலனை மட்டும் கருத்தில் கொண்டு மக்கள் நலன்களை பொருட்படுத்தாது நிலைப்பாட்டால் இன்றைக்கு இந்த மோசமான சட்டம் பாசிச சட்டம் நிறைவேறியுள்ளது இதற்கு அதிமுகவை காரணமாக இருப்பது என்பது வேதனைக்குரியது அதிமுக தன்னுடைய நிலைப்பாடுகளை பரிசீலிக்க வேண்டும் மிக மோசமான பிற்போக்கான மதவாத அரசியல் போக்கை கைவிட வேண்டும் இது எம்ஜிஆருக்கும் ஜெயலலிதா செய்கிற துரோகம் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று கூறினார்





Conclusion:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.