ETV Bharat / city

‘மோரூர் வன்முறைக்கு காவல்துறையே காரணம்’ - திருமாவளவன்

author img

By

Published : Sep 29, 2021, 10:00 AM IST

சேலம் மோரூரில் நடைபெற்ற வன்முறைக்கு காவல் துறையின் அணுகுமுறை தான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

thirumavalvana protest
திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை ஏற்றவிடாமல் தடுத்த காவல் துறையினரை குற்றஞ்சாட்டி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொடிக் கம்பத்தை ஏற்ற தடையாக இருந்த காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்காதே எனவும் முழக்கமிடப்பட்டது.

விசிகவினரை காவல் துறை ஒடுக்குகிறது

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சேலம் மாவட்டத்தில் விசிக கொடியேற்றும் விவகாரத்தில் காவல் துறை முன்னிலையில் சாதிவாதிகள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விசிகவினரை காவல் துறை ஒடுக்குகிறது.

காவல் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்க விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். தற்போது, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார்.

காவல்துறை காரணம்

தொடர்ந்து பேசிய அவர், “இந்த போராட்டத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது காவல் துறையை கண்டிக்கின்ற போராட்டம். சில காவல் துறை அலுவலர்களுக்கு விசிகவினரை பிடிப்பதில்லை. காவல் துறையின் உளவியல் தலித் விரோத உளவியலாக உள்ளது.

பாமக ஒரே கம்பத்தில் தனது கொடியையும் சாதி சங்க கொடியையும் ஏற்றுகிறது. இந்தியாவில் வேறு எந்த கட்சியும் இவ்வாறு சாதி அரசியலை செய்வதில்லை. மோரூரில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் காவல் துறை தான். காவல் துறை அலுவலர்களின் அணுகுமுறையால் தான் இந்த வன்முறை நடந்தது” என தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்ட விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தடையை மீறி கொடிக் கம்பம் நட முயன்ற விசிகவினர் காவலர்களுடன் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.