ETV Bharat / city

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு: விசிக, இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

author img

By

Published : Dec 20, 2019, 7:01 PM IST

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையை அடுத்த பம்மலில், இஸ்லாமிய அமைப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

பம்மல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை இணைந்து குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், இச்சட்டத்தை எதிர்த்து சென்னையில் 23ஆம் தேதி திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் திரளாக பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பம்மலில் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: எங்களது ஆதரவு NRC-க்கு கிடையாது - ஒடிசா முதலமைச்சர்

Intro:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை
எதிர்த்து சென்னை அடுத்த பம்மலில் இஸ்லாமிய அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இனைது சுமார் 200 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.Body:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை
எதிர்த்து சென்னை அடுத்த பம்மலில் இஸ்லாமிய அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இனைது சுமார் 200 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை அடுத்த பம்மலில் விடுதலைச்சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம் தலைமையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஜனநாயக பேரவை மற்றும் விடுதலை சிறுத்தை கட்யினர் கலந்துக்கொண்டு மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர்

பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்

மேலும் சென்னையில் 23ம் தேதி தி.மு.க தலைமையில் நடைபெறும் அனைத்துகட்சியினர் பேரணியில் திரளாக பங்கேற்கவுள்ளதாக விடுதலைச்சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம் தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.