ETV Bharat / city

துணை வேந்தர் சூரப்பா - மாநில அரசு இடையிலான மோதல் போக்கு கவலையளிக்கிறது : டிடிவி தினகரன்

author img

By

Published : Oct 12, 2020, 4:38 PM IST

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'உயர் புகழ் கல்வி நிறுவனம்' அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மாநில அரசும், துணை வேந்தர் சூரப்பாவும் மோதல்போக்கை கடைப்பிடிப்பது கவலையளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

ttv-dinakaran-tweet-on-anna-university-issue
ttv-dinakaran-tweet-on-anna-university-issue

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'உயர் புகழ் கல்வி நிறுவனம்' (Institute of Eminence -IoE) என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கைக் கடைபிடிப்பது கவலையளிக்கிறது.

அந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்று எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த நிலையில், மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலும், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமலும் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.

இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.