ETV Bharat / city

மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

author img

By

Published : Nov 11, 2020, 1:32 PM IST

Updated : Nov 11, 2020, 3:08 PM IST

சென்னை: மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

counselling
counselling

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முதல் முறையாக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், ” மருத்துவப்படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு நேற்று மாலை வரை 24 ஆயிரத்து 900 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 14 ஆயிரத்து 234 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 19 ஆயிரத்து 7 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 9 ஆயிரத்து 903 மாணவர்களும் விண்ணப்பங்களை நிரப்பி அளித்துள்ளனர்.

மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

மருத்துவப்படிப்பில் சேர நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி அன்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் ” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழில் தவறு இருந்தால் மாணவர் சேர்க்கை ரத்து'

Last Updated : Nov 11, 2020, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.