ETV Bharat / city

தொடர்ந்து 1000-க்கும் குறைவாக கரோனா பாதிப்பு: இன்று 811 நபர்களுக்கு பாதிப்பு

author img

By

Published : Jan 6, 2021, 8:07 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 63 ஆயிரத்து 268 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில், புதிதாக 811 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

today covid -19 update
today covid -19 update

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 811 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 63 ஆயிரத்து 268 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 804 நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஐந்து நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், பிகாரிலிருந்து வந்த தலா ஒருவருக்கு என 811 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 173 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்மூலம் எட்டு லட்சத்து 23 ஆயிரத்து 181 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 7,665 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்து மேலும் 943 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து மூன்றாயிரத்து 328 என அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும் என 11 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 188 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 2,26,937

கோயம்புத்தூர் - 52,821

செங்கல்பட்டு - 50,362

திருவள்ளூர் - 42,884

சேலம் - 31,815

காஞ்சிபுரம் - 28,858

கடலூர் - 24,761

மதுரை - 20,645

வேலூர் - 20,339

திருவண்ணாமலை - 19,212

தேனி - 16,942

தஞ்சாவூர் - 17,300

திருப்பூர் - 17,265

விருதுநகர் - 16,415

கன்னியாகுமரி - 16,466

தூத்துக்குடி - 16,132

ராணிப்பேட்டை - 15,972

திருநெல்வேலி - 15,360

விழுப்புரம் - 15,058

திருச்சி - 14,310

ஈரோடு - 13,880

புதுக்கோட்டை - 11,439

கள்ளக்குறிச்சி - 10,822

திருவாரூர் - 10,992

நாமக்கல் - 11,309

திண்டுக்கல் - 11,019

தென்காசி - 8,303

நாகப்பட்டினம் - 8,231

நீலகிரி - 8,012

கிருஷ்ணகிரி - 7,921

திருப்பத்தூர் - 7,488

சிவகங்கை - 6,560

ராமநாதபுரம் - 6,346

தருமபுரி - 6,471

கரூர் - 5248

அரியலூர் - 4,644

பெரம்பலூர் - 2,258


சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 930

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1026


ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.