ETV Bharat / city

முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

author img

By

Published : Jun 23, 2019, 6:03 PM IST

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cabinet

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை வருகின்ற 28ஆம் தேதி கூட இருக்கிறது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்களை திமுக கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம், துறை வாரியான புதிய அறிவிப்புகள், நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள், மானிய கோரிக்கை மீதான விவாதம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும், சபையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

Intro:Body:தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை சென்னை தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 28 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம், துறை வாரியாக புதிய அறிவிப்புகள், நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள், மானிய கோரிக்கை மீதான விவாதம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும், சபையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.