ETV Bharat / city

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

author img

By

Published : Dec 13, 2021, 8:21 AM IST

தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர். ரவியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து புகார் மனு அளித்தார்.

ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் மனு
ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் மனு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், பாஜக ஆதரவாளர்களையும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் திமுக அரசைக் கண்டித்தும், தேச இறையாண்மைக்கு எதிராகவும், முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து பேசினார்
ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

இந்த சந்திப்பின் போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிகே சரஸ்வதி, மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், மாநிலச் செயலாளர் டால்ஃபின் ஸ்ரீதர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜெ. தீபா, ரஜினி குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.