ETV Bharat / city

‘ஆபாச படமா... கட்டங்கட்டி தூக்குவோம்’ - போலீஸ்!

author img

By

Published : Jan 29, 2020, 9:02 PM IST

சென்னை: தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Child porno  teen arrested after downloading, child porno, chennai teen arrested on child porno, ஆபாச படம் பார்த்தவர் கைது, ஆபாச படம்
chennai teen arrested on child porno

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது.

இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் இரண்டு வருடங்களுக்கு மேலாக குழந்தைகளை ஈடுபடுத்தி தயாரிக்கப்பட்ட ஆபாச படங்களை பார்த்துள்ளதாக தெரியவந்தது.

'தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!' - சொன்னவர் அர்ஜுன் சம்பத்

பின்னர் தடைசெய்யப்பட்ட ஆபாச இணையதளத்திலிருந்து எவ்வாறு இவர் படங்களை பதிவிறக்கம் செய்தார் என்பதுகுறித்து காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Intro:Body:குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்த பட்டதாரி இளைஞர் கைது.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ்(24).இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்த விவரங்களின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர்.பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2 வருடமாக குழந்தைகளை ஈடுபடுத்தி தயாரிக்கப்பட்ட ஆபாச படங்களை பாலியல் நோக்கத்தோடு தீய எண்ணத்தில் பார்த்துள்ளதாக தெரியவந்தது.பின்னர் இவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.