ETV Bharat / city

' இலங்கைத் தமிழர்கள் குடியுரிமையில் தமிழ்நாடு அரசு நாடகம் ' - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Jan 6, 2020, 9:35 PM IST

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு நாடகமாடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குறை கூறியுள்ளார்.

ks alagiri
ks alagiri

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ' உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்றக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எங்கள் அணிக்கு மக்கள் 50 விழுக்காட்டிற்கும் மேல் வாக்களித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது பொருத்தமற்றது. இலங்கை அரசு இதற்கு ஒத்துக்கொள்ளாது. இலங்கைத் தமிழர்களுக்கு முதலில் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, தற்போது அவர்களை ஏமாற்ற இரட்டைக் குடியுரிமை என தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது.

பாஜக 5000 இடங்களில் 90 இடங்கள் வெற்றி பெறுவது என்பது பெரிதல்ல - அழகிரி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவின் ஆதரவைப் பெற்றவர்கள். அரசின் ஆதரவு இருந்தால்தான் இவ்வளவு பெரியத் தாக்குதலை நடத்த முடியும். அங்கு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், நாளை மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஜனவரி 8ஆம் தேதி நடக்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது' எனக் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ' 5 ஆயிரம் இடங்களில் 90 இடங்கள் வெற்றி பெறுவது என்பது பெரிது இல்லை. சமூகம், சொந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள். அது எல்லாமும் பாஜகவுக்கான வாக்குகள் கிடையாது' என்றார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம்!

Intro:Body:தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில் :


உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எங்கள் அணிக்கு மக்கள் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்களித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது பொருத்தமற்றது,
இலங்கை அரசு இதற்கு ஒற்றுக்கொள்ளாது. இலங்கை தமிழர்களுக்கு முதலில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

இரட்டை குடியுரிமை என கூறி அவர்களுக்கு குடியுரிமை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்க அதிமுக அரசு நிர்பந்திக்காமல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த விட்டது. தற்போது இலங்கை தமிழர்களை ஏமாற்ற இரட்டைக்குடியுரிமை என தமிழக அரசு நாடகம் ஆடுகிறது.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவின் ஆதரவைப் பெற்றவர்கள். அரசின் ஆதரவு இருந்தால் தான் இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்த முடியும்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை 4 மணிக்கு வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஜனவரி 8 அனைத்து தொழிற் சங்கங்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, 5000 இடங்களில் 90 இடங்கள் வெற்றி பெறுவது என்பது பெரியது இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் சமூகம் சொந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள். அது பாஜகவுக்கான வாக்குகள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.