ETV Bharat / city

ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது

author img

By

Published : Aug 31, 2022, 11:26 AM IST

சென்னையில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்புணர்வு  போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது  சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையம்  சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்  Sexual haraassment  Arrest by police under POCSO Act  POCSO Act  Chennai Purumbakkam Police Station  Selaiyur All Women Police Station
பாலியல் வன்புணர்வு

சென்னையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால், கணவரை பிரிந்து தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது பெண் குழந்தையுடன் அவரோடு வாழ்ந்து வந்தார்.

சிறுமியின் தாயார் நேற்று (ஆகஸ்ட் 30) வேலைக்கு சென்ற நிலையில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல், சிறுமியின் தாயிடம், சிறுமியில் உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தாயார், சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வளர்ப்பு தந்தை மீது சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் தான் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: வெள்ளப்பெருக்கு.. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.