ETV Bharat / city

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை -சீமான் குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 16, 2019, 8:00 PM IST

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்கள் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் தெளிவாக இல்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை -சீமான் குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வாக்கு இயந்திரத்தில் எங்கள் கட்சியின் சின்னம் சிறியதாக பதியப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும், உயர் நீதிமன்றத்திடமும் முறையிட்டோம். ஆனால் நேரம் குறைவாக உள்ளதை காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுக்கக்கேரி வழக்கு தாக்கல் செய்தோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாற்று அரசியலை முன்மொழியும் எனக்கும், பவன் கல்யாணுக்கும் மட்டும்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை -சீமான் குற்றச்சாட்டு!

இந்தத் தேர்தல் மக்களுக்கான தேர்தல் அல்ல; முதலாளிகளுக்கான தேர்தல். சுயேச்சையால் பிரச்னை இல்லை. அதனால் அவர்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி. முதலாளித்துவ பேரத்துக்கு தேர்தல் எதற்கு? இதற்கு இந்தியாவையே டெண்டர் விட வேண்டியது தானே?" என கேள்வி எழுப்பினார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்கள் சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயர்கள் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வாக்கு எந்திரத்தில் எங்கள் கட்சியின் சின்னம் சிறியதாக பதியப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும், உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டோம். ஆனால் நேரம் குறைவாக உள்ளதை காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுக்ககேரி வழக்கு தாக்கல் செய்தொம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாற்று அரசியலை முன்மொழியும் எனக்கும், பவன் கல்யாணுக்கு மட்டும் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதிக வாக்கு பெற்றுவிட கூடாது. வளர்ந்துவிடக் கூடாது. என்ற எண்ணத்திஒன் வெளிப்பாடு.

நாங்கள் வந்தால் மீத்தேன் எடுத்துச் செல்ல விட மாட்டோம், அணு உலைகளிலிருந்து தான் மின்சாரம் எடுக்க முடியுமா. அனைத்துக்கும் மாற்று திட்டம் இருக்கு. இந்தியாவில் எத்தனை மலைகள் இருக்கிறது. ஆனால் நியூட்ரினோ திட்டத்தை மேற்கு தொடர்ச்சி மலையில் தான் செயல் படுத்த வேண்டுமா. அங்கு தான் தடிமன் இருக்கிறது என்று அமைச்சர் கூறுகிறார். மேற்குதொடர்ச்சி மலை தடிமன்னாக இருக்கிறது என்று கடித்தா பார்த்தார்கள்.

இந்த தேர்தல் மக்களுக்கான் அதேர்தல் அல்ல முதலாளிகளுக்கான தேர்தல். சுயேட்சையால் பிரச்னை இல்லை என்று அவர்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆனையம் நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி. முதலாளித்துவ பேரத்துக்கு தேர்தல் எதற்கு. இந்தியாவையே டென்டர் விட வேண்டியது தானே.

அதிகமாக பணம் கொடுத்தார்கள் என்று தேர்தலை நிறுத்துகிறார்கள். தேர்தல் நிறுத்துவதோடு முடிந்துசிட்டதா. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா. பணம் கொடுத்தால் பத்து வருடம் தேர்தலில் நிற்க கூடாது என்று சட்டம் கொண்டு வாருங்கள். வேலூரில் துரைமுருகன் மட்டும்தான் பணம் வைத்துள்ளாரா. மற்றவர்கள் கொடுக்கவில்லையா.

8 வழிச்சாலை திட்டம் இல்லை எந்த திட்டத்திலும் இங்கிருப்பவர்கள் தீர்மானிக்கவே முடியாது. சாகர் மாலா திட்டத்தின் ஒரு பகுதி தான் 8 வழிச்சாலை திட்டம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட்டுக்கு விலக்கு அளிக்கப்ப்டும் என்று தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நீட்டை விலக்கி இருக்கலாமே. நீட், ஜி.எஸ்.டியை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். இப்போது இவர்கள் செயல்படுத்திவிட்டார்கள்.

தேசியக் கட்சி என்று எதுவும் இல்லை. தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் கொடுக்க முடியாது என்று கர்நாடகா கூறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி செய்வது யார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா. ஒரு மாநிலத்துக்கு தன்ணீர் தரமாட்டேன் என்று சொல்பவர்கள் எப்படி தேசிய கட்சியாக இருக்க முடியும். தேசிய கட்சி என்று செல்பவர்கள் தமிழகத்தில் புயல் வந்தபோது, நீட் தேர்வினால் அனிதா இறந்த போது, ஆந்திராவில் மரக்கட்டைகளுக்கு கொடுத்த மரியதையை கூட மனிதர்களுக்கு தராமல் 20 தமிழரை கொன்ற போது தமிழகத்துக்கு வந்து ஆறுதல் கூறீனார்களா. ஆனால் தற்போது 30 நாட்களில் 4 நாள்கள் ஓட்டு கேட்க ஓடி வருகின்றனர்.

இவர்கள் அமைப்பது எல்லம் நோட்டணி, சீட்டணி தான். கொள்கை கூட்டணி இல்லை. கூட்டணி ஆட்சி தான் அமைக்கிறீர்களே தவிர கூட்டாட்சி எங்கே அமைகிறது.

மாநிலக் கட்சிகளில் இருப்பவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் நாடு நாசமாக போய்விடுமா.

நோட்டாவுக்கு வாக்களிப்பது நன்றாக சமைத்து யாரும் சாப்பிடாமல் குப்பையில் கொட்டுவதற்கு சமம். வேட்பாளர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்த்து புது தலைமுறையினர் வாக்களிக்க வேண்டும்.

நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை என்று அனைவருக்கும் தெரியும். அதை தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதியாக கூறி வருகின்றனர். 8 வழிச்சாலையால் விவசயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகிறது என்று பேசுகிறோம். நதிநீர் இணைப்பு திட்டத்தால் அதே பிரச்னை ஏற்படாதா. நதிநீர் இணைப்புக்கு 1 கோடி ரூபாய் தருவேன் என்று ரஜினி அப்போது சொன்னார். தந்தாரா. ஏனென்றால் இது சாத்தியமில்லாத திட்டம் என்று அவருக்கு தெரியும்.  

கமல் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று என்று கூறி என்னை கொச்சைப்படுத்தாதீர்கள். அவர் இந்தியரா, தமிழரா, திராவிடரா என்று அவரே முடிவெடுக்கவில்லை. 

மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் நிதியை பற்றி ஒன்றும் தெரியாது என்று சுப்பிரமணி சுவாமி கூறினார். தற்போது அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஒருஇ நவீன கால நாரதர்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை 7 குற்றவாளிகள் என்றே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறுகிறார். அந்தக் கட்சியில் அப்படி கூறினால்தான் தலைவராக நீடிக்க முடியும்.  

எந்த சின்னம் தெரியவில்லையோ அதுதான் எங்கள் சின்னம் என்று மக்களிடம் கூற வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளனர். அடுத்து நடக்கவிருக்கும் 4 சட்டமன்ற இடைதேர்தலிலாவது எங்கள் சின்னத்தை வாக்கு எந்திரத்தில் தெளிவாக போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.