ETV Bharat / city

‘எந்த ஊரு? உன் சாதி என்ன?’ - செய்தியாளரிடம் எகிறிய கிருஷ்ணசாமி

author img

By

Published : May 28, 2019, 6:21 PM IST

Updated : May 28, 2019, 9:52 PM IST

சென்னை: பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ‘நீ எந்த ஊரு? உன் சாதி என்ன?’ என கிருஷ்ணசாமி ஒரு செய்தியாளரிடம் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணசாமி

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தனுஷ் குமாரிடம் தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கிருஷ்ணசாமியிடம் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் செய்தியாளர்கள் குறித்தும் அவர்கள் பணியாற்றும் செய்தி நிறுவனங்கள் குறித்தும் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

‘எந்த ஊரு? உன் சாதி என்ன?’ - செய்தியாளரிடம் எகிறிய கிருஷ்ணசாமி

அப்போது, தென்காசி தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன? அதனை புதிய தமிழகம் கட்சி ஆய்வு செய்துவிட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ’நீ ஏன் இந்தக் கேள்வியையே தொடர்ந்து கேட்கிறாய். நீ எந்த ஊர், எந்த சாதி?’ என்று ஆவேசமாக கேட்டார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். செய்தியாளர் சந்திப்பின் போது ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு செய்தியாளர்களை குறித்தும் செய்தி நிறுவனங்களை குறித்தும் கிருஷ்ணசாமி தேவையற்ற கருத்துகளை கூறினார். அப்போது தென்காசி தொகுதியில் போட்டியிட்ட நீங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன? அதனை புதிய தமிழகம் கட்சி ஆய்வு செய்துவிட்டதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு நீ ஏன் இந்த கேள்வியே தொடர்ந்து கேட்கிறாய். நீ எந்த ஊர், எந்த சாதி என்று கேட்டார். 

இதற்கு செய்தியாளர் தன்னுடைய ஊர் மற்றும் சாதியின் பெயரை கூறியவுடன் அதனால் தான் நீ இப்படி கேட்கிறாய் என்று கிருஷ்ணசாமி கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு கட்சியினருக்கும் செய்தியாளருக்கும் இடயே வாக்குவாதம் ஏற்பட்டது.

பொதுவெளியில், செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி கேட்ட செய்தியாளரின் சாதி பெயரை கேட்ட அரசியல் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. 
Last Updated : May 28, 2019, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.