ETV Bharat / city

'எனக்கே வா.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..' - பொள்ளாச்சி ஜெயராமன்

author img

By

Published : Jan 20, 2022, 6:52 PM IST

Updated : Jan 20, 2022, 7:51 PM IST

தனக்கும் மிரட்டல் பாணியிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டில் சோதனை செய்தனர் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

former Deputy Speaker Pollachi Jayaraman said Anti corruption ride in the style of intimidation
former Deputy Speaker Pollachi Jayaraman said Anti corruption ride in the style of intimidation

சென்னை: நுங்கம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனின் உறவினர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது அந்தச் சோதனை நிறைவடைந்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்தச் சோதனை 6 மணி நேரத்தில் முடிந்தது. இந்த வீட்டில் வசித்து வரும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "துணை சபாநாயகராக நான் இருந்த போது வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு நுங்கம்பாக்கம் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வருகிறேன்.

இன்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வந்தனர். சோதனை நடத்த வேண்டும் எனக் கூறியபோது ஏன் எதற்காக எனக் கேட்டேன். அதற்குச் சரியான விளக்கத்தைத் தரவில்லை.

ஜனநாயகத்தை மிரட்டும் குறுக்கு வழி

சோதனைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தேன். என்னுடைய வீட்டிலே எந்த பொருளும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைப்பற்றப்படவில்லை. வீட்டிலிருந்த 3 அறைகளிலும் சோதனை நடத்தினர். சமையல் அறையிலும் சோதனை நடத்தினர். எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள்.

எந்த ஆவணங்களும், பணம், பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மிரட்டிப் பார்ப்பதற்கான சோதனையே இது. அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளராக இருக்கிறேன். நேற்று தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று அதிமுகவின் கருத்துக்களைப் பதிவு செய்தேன்.

அதன் பிறகே இந்தச் சோதனை. மற்ற கட்சியினர் இந்தச் சோதனை எப்படி நினைப்பார்கள்? எப்படித் தேர்தல் பணியாற்றுவார்கள்? என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மிரட்டும் வகையிலான குறுக்கு வழியே இது.

அதிமுகவினருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையால் பீதி

இந்த வீட்டின் உரிமையாளர் சிவக்குமாராக இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் நான் தான் குடியிருப்பதாகத் தெரிவித்தேன்.

என்னைப் பார்த்த பிறகாவது சென்று இருக்கலாம். உள்நோக்கத்தோடு சோதனை. அதிமுக தொண்டர்களிடமும், மக்களிடத்திலும் பீதியை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

'எனக்கே வா.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..' - பொள்ளாச்சி ஜெயராமன்

இந்தச் சோதனையின் போது என்ன நடந்தது என்பதனை தெரிவிக்க முடியாது. என்னிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைத் தெரிவித்து விட்டேன். நான் யாரிடமும் பேச லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அனுமதிக்க வில்லை. செல்போனை வாங்கி வைத்து விட்டனர்.

மிரட்டும் பாணியில் ரெய்டு

இந்த வீட்டில் என்னுடைய பொருள்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தச் சோதனையைத் தவிர்த்து இருக்க வேண்டும்.

மிரட்டலுக்குகான பாணியே இது. சோதனை செய்வதற்காக ஆணையில் சிவக்குமார் பெயர் இருக்கிறது" என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவை அழித்துவிட வேண்டும் நோக்கத்தில் விடியா திமுக அரசு செயல்படுகிறது - ஜெயக்குமார்

Last Updated : Jan 20, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.