ETV Bharat / city

'பட்டனை அழுத்தினால் காப்பாற்ற போலீஸ் வரும்'

author img

By

Published : Dec 10, 2019, 3:01 PM IST

சென்னை: காவலன் செயலி மூலம் உதவிக்கு அழைத்தால் காவல் துறை உடனடியாக உதவும் என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Chennai commissioner Viswanathan
Chennai commissioner Viswanathan

சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காவலன் எஸ்.ஒ.எஸ். செயலியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது மாணவிகள் மத்தியில் பேசிய அவர், "ராணி மேரி கல்லூரி அருகே டிஜிபி அலுவலகம் இருக்கிறது. உங்களுக்கு பிரச்னை என்றால் முதலில் அங்கு தகவல் சென்றுவிடும்.

காவலன் எஸ்.ஒ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதிலுள்ள பட்டனை அழுத்துங்கள்; உடனே காவல்துறை உதவும். இந்த செயலி தமிழ்நாடு முதலமைச்சரால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பான உணர்வு இல்லையென்றால் உடனே காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். இந்தியாவிலேயே பாதுப்பான நகரங்களாக சென்னையும் கோவையும் திகழ்கின்றன. இதுமட்டுமின்றி, அம்மா ரோந்து வாகனமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது, அவர்களிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம்.

காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி

முகம் தெரியாத நபர்களோடு சமூக ஊடகங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். இதுவரை காவலன் செயலியில் நான்கு நாட்களில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும், தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்றார்

மேலும், சென்னை பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு இந்த செயலி மூலம் காவல் துறையினர் உடனே உதவியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Intro:Body:காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி*

காவலன் செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய நான்கு நாட்களில் 1லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாவும் தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து வருவதாகவும்
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்...

சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காவலன் எஸ் ஒ எஸ் கைப்பேசி செயலியை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர்...

ராணிமேரிக்கல்லூரி அருகே டிஜிபி அலுவலகம் இருக்கிறது. உங்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் அங்கு தகவல் சென்று விடும். காவலன் எஸ் ஒ எஸ் செல்போன் செயலியை பதிவிரக்கம் செய்து கொண்டு உங்களுக்கு ஏதாவது சிகிச்சை என்றால் அந்த பட்டனை அழுத்தினால் உடனே காவல்துறை உதவும். தமிழக முதலமைச்சரால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. இது அனைவரும் பயன்படுத்தி வேண்டும்...

சென்னை ஐடி ஊழியர் லாவண்யாவிற்கு காவல்துறை உடனே உதவியதை சுட்டிக்காட்டினார். பாதுகாப்பான உணர்வு இல்லையென்றால் உடனே காவலன் எஸ் ஒ எஸ் செயலி மூலம் தெரிவிக்கலாம். இந்தியாவிலேயே பாதுப்பான நகரம் சென்னை கோவை மாநகரங்கள் திகழ்வதாக கூறினார்...

அம்மா ரோந்து வாகனம் வரும் அவர்களிடம் உங்கள் குறைகளை சொல்லலாம். முகம் தெரியாத நபர்களோடு சமூக ஊடகங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் நல்ல நண்பர்களை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். காவன் செயலிபற்றி உங்கள் குடும்பத்தினருக்கும் சொல்லவும்...

காவலன் செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய நான்கு நாட்களில் 1லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாவும் தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து வருவதாகவதாகவும் மேலும் இது அதிகரிக்க உதவும் என்று கூறினார்...

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம்ஆனந்சிங்கா, கிழங்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டரன்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.