ETV Bharat / city

சிறுமிகளின் ஆபாசப் படத்தை ஷேர் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு

author img

By

Published : May 19, 2022, 9:22 AM IST

சிறுமிகளின் ஆபாசப் படத்தை பதிவிறக்கம் செய்து ஷேர் செய்த இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

சென்னை: 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளங்கள் வாயிலாக பார்ப்பவர்கள் மற்றும் ஷேர் செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறுமி ஆபாசப் படங்கள் பதிவிறக்கம் செய்ததாக தமிழ்நாட்டில் பல இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை தேசிய மையம் தயார் செய்து இந்தியா முழுவதிலும் அந்தந்த காவல் நிலையத்திற்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி சூளை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், தனது செல்போனில் தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாசப் படத்தை பார்த்து தனது நண்பர் ஒருவருக்கு ஷேர் செய்துள்ளதாக தேசிய மையம் வேப்பேரி அனைத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளது.

அதன் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான சந்தோஷ்குமார் என்பவரிடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு சந்தோஷ்குமாரின் படிப்பிற்காக அவரது தந்தையான சென்னை உயர் நீதிமன்ற கிளர்க் சுப்பிரமணியன் செல்போனை வாங்கி கொடுத்துள்ளது தெரியவந்தது.

அந்த செல்போனை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாசப் படங்களை பார்த்து வந்ததும், அந்த ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து அவரது நண்பர் குகனுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை வேப்பேரி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நரிக்குறவ மக்களின் 4 ஏக்கர் நிலம் அபகரிப்பு: டிஜிபி அலுவலகத்தில் புகார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.