ETV Bharat / city

'தேர்வு முடிவை வெளியிடுங்கள்!' - ஆசிரியர் தேர்வு வாரியம் முன் சிறப்பாசிரியர்கள் போராட்டம்!

author img

By

Published : Sep 9, 2019, 5:17 PM IST

சென்னை: சிறப்பாசிரியர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம்

சிறப்பாசிரியர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தேர்வு எழுதிய தேர்வர் சுவாமிநாதன் கூறியதாவது, “சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய நான்கு பணியிடங்களுக்கு 2017 செப். 23ஆம் தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம், போட்டி எழுத்துத் தேர்வு நடத்தியது.

தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியலை 2018 அக். 12ஆம் தேதி அன்று வெளியிட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் வழக்கு முடிந்த பின்னர், இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளிவந்தது.

இந்த நிலையில் இசைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. பிற பாடங்களான உடற்கல்வி, தையல், ஓவியம் ஆகியவற்றிற்கான தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். நாங்கள் தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக சிறப்பாசிரியர்கள் பணி தேர்வுப் பட்டியல் வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பாசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டம்

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, “சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வு எழுதியவர்களில் தையல் ஆசிரியர் பணிக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஓவிய ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும். தையல் இசை ஓவிய ஆசிரியர்களுக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு பணிநியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறும்.

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டபோது, அவர்களுக்கான கல்வித் தகுதியில் சில குழப்பங்கள் இருந்தன. எனவே மீண்டும் அவர்களுக்குச் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அவர்களுக்குரிய அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன்பின்னர் புதிய பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

Intro:சிறப்பாசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டம்


Body:சிறப்பாசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டம்

சென்னை, சிறப்பாசிரியர்கள் தங்களுக்கான தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்வு எழுதிய தேர்வர் சுவாமிநாதன் கூறியதாவது, சிறப்பாசிரியர்களுக்கான உடற்கல்வி ,தையல், இசை, ஓவியம் ஆகிய நான்கு பணியிடங்களுக்கு 23 .9. 2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தியது. தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பட்டியலை 12 .10. 2018 அன்று வெளியிட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் வழக்கு முடிந்த பின்னர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு 20. 8. 2019 அன்று வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இசைபாட பிரிவிற்கான தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மற்ற பாடங்களான உடற்கல்வி தையல் ஓவியம் ஆகியவற்றிற்கான தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். நாங்கள் தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக சிறப்பாசிரியர்கள் பணி தேர்வு பட்டியல் வெளியிட வேண்டும் எனக் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்களில் தையல் ஆசிரியர் பணிக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஓவிய ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்படும். தையல் இசை ஓவிய ஆசிரியர்களுக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு பணிநியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெறும்.

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டபோது அவர்களுக்கான கல்வி தகுதியில் சில குழப்பங்கள் இருந்துள்ளது. எனவே மீண்டும் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது, அவர்களுக்குரிய அனுபவத்திற்கான மதிப்பெண்கள் வழங்கிய பின்னர் புதிய பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.