ETV Bharat / city

இந்தியாவுக்கே சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Sep 17, 2022, 4:06 PM IST

பெரியார் பிறந்தநாளை, சமூகநீதி நாளாக உறுதிமொழி ஏற்பது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Etv Bharatஇந்தியாவுக்கே பெரியார் திடல் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின்
Etv Bharatஇந்தியாவுக்கே பெரியார் திடல் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் பெண்ணுரிமையின் தலைமையகமாக தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கே பெரியார் திடல் தலைமையகமாக உள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் பெரியார் உலகம் என்னும் ஆய்வகம் மற்றும் பெரியாரியப் பயிலகம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதன்பின் அடிக்கல் நாட்டி பேருரை ஆற்றினார். அப்போது அவர், 'பெரியார் திடல் தனக்கு தாய்வீடு. செப்.17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளில் மட்டுமல்ல எப்போதும் சொந்த வீட்டுக்கு வருபவன் நான். தமிழினத்துக்கே தலைமையகம் பெரியார் திடல். சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு மற்றும் பெண்ணுரிமையின் தலைமையகமாக, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பெரியார் திடல் தலைமையகமாக விளங்குகிறது.

பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து எல்லோரும் உறுதிமொழி ஏற்க உத்தரவிட்டேன். இது நமது ஆட்சிக்கு கிடைத்த பெருமை. பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து பல்வேறு மொழிகளில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். பெரியார் உலக தலைவராக விளங்குவதாலேயே பெரியார் உலகம் என்று ஆய்வகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கி. வீரமணி 10 வயதில் பெரியார் தொண்டராக பணியாற்றி 90 வயது வரை சுறுசுறுப்பாக செயல்படுபவர் எனத் தெரிவித்தார்.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார். பெரியார் பிறந்தநாளை சமூக நிதி நாளாக அறிவித்து இந்திய வரலாற்றின் ஒப்பற்ற புரட்சியை ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். அதிமுக அரசு கிடப்பில் போட்ட திட்டங்களுக்கு விடியல் ஏற்படுத்தி, பெரியார் உலகத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். பெரியார் உலகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய இருக்கிறது. இது இன்னொரு மாமல்லபுரமாக மாறும் எனத் தெரிவித்தார்.

60 கோடி ரூபாய் செலவில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் அமையவிருக்கிறது. 6 வருடத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, நகராட்சி நிர்வாகம் நகர்பகுதி குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை பெருநகர மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.