ETV Bharat / city

பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டு எண் மாற்றம்..!

author img

By

Published : Jul 9, 2020, 6:34 PM IST

சென்னை: பல்லாவரம் பகுதிக்கான அஞ்சல் குறியீட்டு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Pallavaram Pin Code Number Changed
Pallavaram Pin Code Number Changed

விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், சாதாரண தபால், மணியார்டர் ஆகியவற்றை விரைவாக பட்டுவாடா செய்வதற்கு ஏற்ற வகையில், சென்னை பல்லாவரம் பகுதிகளின் அதிகார வரம்பும், அஞ்சல் குறியீட்டு எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாக, சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கிருஷ்ணா நகர் 1வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜ ராஜேஸ்வரி அவின்யு, ரெயின்போ காலனி முதல் மற்றும் 2வது தெரு, கங்கா தெரு, சாமிநாதன் தெரு ஆகிய பகுதிகளின் அஞ்சல் பட்டுவாடா, பழைய பல்லாவரம் – 600 117 அஞ்சலகத்தால் இதுவரை செய்யப்பட்டு வந்தது.

இந்தப் பகுதிகளுக்கான அஞ்சல் பட்டுவாடாவை இம்மாதம் 13 ஆம் தேதியிலிருந்து மடிப்பாக்கம் 600091 அஞ்சலகம் செய்ய உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட பகுதிவாழ் பொதுமக்கள் இனி 600091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்துங்கள்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி இந்து மகாசபா துணைத்தலைவர் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.