ETV Bharat / city

அத்தியாவசிய பொருட்களை நேரடியாக தொண்டு நிறுவனங்கள் வழங்கக்கூடாது - உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு

author img

By

Published : Apr 13, 2020, 12:36 PM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர இருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களை நேரடியாக தொண்டு நிறுவனங்கள் வழங்ககூடாது - உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு
அத்தியாவசிய பொருட்களை நேரடியாக தொண்டு நிறுவனங்கள் வழங்ககூடாது - உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வருமானமின்றியும், உணவின்றியும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருள்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது. சிரமத்திற்கு உள்ளாகியுள்ள பொதுமக்களுக்கு நேரடியாக உணவுப் பொருள்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கும் போது சமூக விலகல் கடைபிடிக்கப்படாமல் இருப்பதால் கரோனா வைரஸ் மேலும் பரவ வாய்ப்பு உள்ளளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர்கள் மூலமாக உரிய பரிசோதனைக்கு பிறகு இதனை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் முறையீடு செய்துள்ளார்.

இந்த முறையீடு ஏற்கப்படும்பட்சத்தில் இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அல்லது புதன் கிழமை வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:

உயர் நீதிமன்ற உத்தரவு: குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.