ETV Bharat / city

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்

author img

By

Published : Mar 15, 2019, 8:53 AM IST

சென்னை: மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

naam

மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளின் கூட்டணி காட்சிகள் முடிவடைந்து தற்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் வருகை என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்திருப்பதால் ஆங்காங்கே முறையான ஆவணங்கள் இல்லாத பணமும் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட இருக்கும் கட்சிகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் “டார்ச் லைட்” சின்னம் ஒதுக்கியது.

மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அவர்கள் கேட்டிருந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.