ETV Bharat / city

கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: வருகிறது அவசரச் சட்டம்!

author img

By

Published : Aug 26, 2020, 6:24 PM IST

கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனை சிலர் கருத்தில் கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை காவல் துறையினரும் பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். இச்சூழலில் தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

law for corona violators in tamilnadu
law for corona violators in tamilnadu

சென்னை: கரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துவருகிறது. இந்த கொடிய வகை நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல், மக்கள் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித் திரிகின்றனர்.

நோயின் தீவிரம் புரியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபடும் சிலரால், மக்கள் பலருக்கு கரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. இதுவரை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதித்தும் மக்கள் பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித் திரிகின்றனர்.

இவ்வேளையில், கரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம், தண்டனை ஆகியவற்றை கடுமையாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. புதிய சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பொது சுகாதாரத் துறை ஏற்கனவே ஆலோசனை நடத்தியது. மேலும், புதிய சட்டம் குறித்த விதிகள் அடங்கிய கோப்புகளை சட்டத்துறையிடம், சுகாதாரத்துறை ஒப்படைக்கவுள்ளது. இப்புதிய சட்டம் தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.