ETV Bharat / city

'நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'- மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Jan 8, 2022, 11:41 AM IST

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

ஏ.கே. ராஜன் குழு பரிந்துரை

முன்னதாக நீட் தேர்வின் பாதிப்புகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் விலக்கு அளிக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது தற்போது வரை தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த வாரம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க பல கட்ட முயற்சிகள் நடந்து தோல்வியில் முடிந்தன.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜன. 6ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்
இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கூட்டத்தில், திமுக சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பாமக சார்பில், ஜி.கே.மணி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : All Party Meeting: நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.