ETV Bharat / city

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

author img

By

Published : Nov 14, 2021, 6:30 PM IST

அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டூர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் வழி கால்வாய்களை ஆக்கிரமித்துக் கட்டியதால் தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளதாகவும் தற்போது இயல்பு நிலை திரும்பியிருப்பதாகவும் ஊரக தொழில்த்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, 350 தொழில் நிறுவனங்கள், 30 சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதி மக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். தொழில் நிறுவனங்களும் பெரும் இன்னல்களை சந்தித்தன. இந்நிலையில், இது தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் முன்னதாக அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிட்கோ அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வழி கால்வாய்கள்

அதனைத் தொடர்ந்து மழைநீர் வடிகால்வாய் செல்லும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கொரட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த தா.மோ.அன்பரசன் ”அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டுர் ஏரிக்கு செல்லக்கூடிய நீர் வழி கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதால் வடக்கு சிட்கோ பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்துள்ளது.

இதனால் ஒரு சில நாள்களாக வெள்ள நீர் வடியாமல் இருந்தது. கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யாத காரணத்தால் மழை நீர் வடிந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.

மேலும், அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் நீர் வழிப்பாதையை நிரந்தரமாக சரி செய்ய தமிழ்நாடு அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: 574 இடங்களில் இருந்து மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது- சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.