ETV Bharat / city

நீட் தேர்வு விலக்கு பொய் வாக்குறுதி அல்ல- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Oct 9, 2021, 5:05 PM IST

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு விலக்கை புறம் தள்ளியதுபோல இந்த ஆட்சியில் நடைபெற வாய்ப்பே இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியம்
அமைச்சர் மா. சுப்பிரமணியம்

சென்னை: தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில், 2021-22ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் "ஜெயித்துக்காட்டுவோம் வா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் ஆர்.ஜெ. பாலாஜி, ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "நீட் தேர்வு எழுதியவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக "ஜெயித்துக்காட்டுவோம் வா" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நீட் எழுதிய ஒரு லட்சத்து 10ஆயிரத்து 971 லட்சம் பேருக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நீட்டுக்கு எதிராக தீர்மானம்

இதில், 200 மாணவர்களுக்குத் தொடர் மன அழுத்தம் இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி கல்வி தொலைக்காட்சியில் நாளை (அக்.10), நாளை மறுநாள் (அக்.11) 3 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படும். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சி தொலைபேசி வாயிலாக அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

நீட் விலக்கு என்பது பொய் வாக்குறுதி கிடையாது. திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு அழுத்தம் கொடுத்து இதிலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்

அதேபோல் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு குறித்து ராஜன் தலைமையில் அறிக்கை ஒன்றை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் நீட் தேர்வு விலக்கை புறம் தள்ளியது போல இந்த ஆட்சியில் நடைபெற வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கான அவசியத்தை பற்றி பேசியுள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.