ETV Bharat / city

மதரீதியாக மக்களைப் பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் - ஜவாஹிருல்லா

author img

By

Published : Dec 13, 2019, 2:42 PM IST

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து மத்திய அரசு மதரீதியாக மக்களைப் பிரிப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

jawahirulla
jawahirulla

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை வானூர்தி நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம். இந்தக் குடியுரிமை திருத்த மசோதா, நாட்டில் அனைவரையும் சமமாக கருத வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு மாறானதாக அமைந்துள்ளது.

மத ரீதியில் மக்களைப் பிரித்து, பாகுபாடு காட்டுகிற இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பாசிச பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்தை மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்க்க வேண்டும். இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்கும் எதிரானது.

இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அதிமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும். பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநில முதல்வர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இனிமேலாவது இச்சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த மாட்டோம் என சொல்வதற்கு தமிழக முதல்வர் முன்வரவேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம் சிறுபான்மையினர்களை மட்டுமல்ல, சாதியற்ற அனைவரையும் ஒடுக்குவதுதான். அதற்கான முன்னோட்டம்தான் இச்சட்டம். அறிவுக்கு பொருத்தமில்லாத வாதங்களை செய்வதில் பாஜகவை மிஞ்சக் கூடியவர்கள் யாரும் இல்லை “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்! சென்னையில் பரபரப்பு

Intro:மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சென்னை விமான நிலையத்தில் பேட்டி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதவை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கின்றோம்

இந்த குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிரானதாக மாறானதாக அமைந்துள்ளது

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு அனைவரையும் சமமாக கருத வேண்டும், அனைத்து சட்டங்களும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை குறிக்கிறது

மத ரீதியில் மக்களைப் பிரித்து அண்டை நாடுகளின் மத்தியிலும் பாகுபாடு காட்டுகிற இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது

பாசிச பாஜக கொண்டு வந்திருக்கிற இந்த சட்டத்தை மதசார்பற்ற கட்சிகள் எதிற்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்

இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்கு எதிரான சட்டமாக இருக்கிறது

இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அதிமுக கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளையும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்

பஞ்சாப்,மேற்கு வங்கம்,கேரளம் ஆகிய மாநில முதலமைச்சர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளையும் எங்கள் மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கும் எனக் கூறியதை வரவேற்கிறேன்

இனிமேலாவது இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கு தமிழக முதல்வர் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்

பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்ன் சித்தாந்தம் சிறுபான்மையர்களை மட்டுமல்ல அதிக சாதியற்ற அனைவரையும் ஒடுக்குவது தான் அவர்களின் திட்டம் அதற்கான முன்னோட்டமாக தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது

பாஜக அரசு சமஸ்கிருத மொழிக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ஒதுக்குவோம் என சொல்லி இருக்கிறது. இதனால் இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்ற 22 மொழிகளையும் ஒடுக்கக்கூடிய முடிவை தான் பாஜக அரசு எடுத்திருக்கிறது

அறிவுக்கு பொருத்தமில்லாத வாதங்களை செய்வதில் பாஜகவை மிஞ்சக் கூடியவர்கள் யாரும் இல்லைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.