ETV Bharat / city

முன்னாள் காதலியின் நெருக்கமான புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பிய நபர் கைது

author img

By

Published : Oct 6, 2020, 7:02 PM IST

சென்னை: திருமணமான பெண்ணின் ஆபாச புகைப்படத்தை அவரது கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Man sends intimate photos of ex lover to husband
Man sends intimate photos of ex lover to husband

சென்னை சூளை பகுதியில் முருகன் தெருவை சேரந்தவர் ரவிகுமார் (60). இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 28 வயதுடைய இவரது இளைய மகள் தி.நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த திலீப்குமார் (28) என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிந்ததால் திருமணம் செய்ய வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்ணை திருமணம் செய்துகொள்ள திலீப்குமாரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் கேட்ட வரதட்சணையை முருகன் குடும்பத்தாரால் கொடுக்க முடியாததால், முருகன் தனது மகளை பெங்களூரை சேர்ந்த சிவபிரசாத் என்பவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் முருகனின் மகள் பெங்களூரில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் தனது காதலிக்கு திருமணம் நடந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத காதலன் திலீப்குமார், அவருடன் நெருங்கி பழகிய புகைபடங்களை தனது காதலியின் கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். இதனை கண்ட சிவபிரசாத் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே தனது மனைவியை அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த முருகன் தனது மகளின் வாழ்க்கை சீரழித்த முன்னாள் காதலன் திலீப்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.