ETV Bharat / city

பள்ளிக்கல்வி துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது

author img

By

Published : Jan 26, 2022, 9:00 AM IST

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30ஆயிரம் பெற்றதுடன், அதற்கு போலி பணிநியமன ஆணை வழங்கியவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

action
action

சென்னை: தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்புலட்சுமி என்பவர் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ராயப்பேட்டையைச் சேர்ந்த டியூசன் மாஸ்டரான ராஜேந்திரன் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

ராஜேந்திரன் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில், அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருவதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என பாலசுப்புலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

போலி பணிநியமன ஆணை

இதனை நம்பிய அவர், முன்பணமாக ரூ.30,000யைக் கடந்த ஜூலை மாதம் ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாலசுப்புலட்சுமியிடம், ராஜேந்திரன் பணிநியமன ஆணை ஒன்றை வழங்கி உள்ளார். அவர் வழங்கிய பணி நியமன ஆணையைக் கொண்டு, பள்ளிக்கல்வி இயக்குனரகரத்திற்கு சென்றதை அடுத்து, அந்த ஆணை போலியானது எனத் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இது பற்றி பாலசுப்புலட்சுமியின் அண்ணன் வெங்கடேசன் என்பவர் ராஜேந்திரனிடம் போலி நியமன ஆணை குறித்து முறையிட்டு பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனிடையே அரசு தேர்வுத்துறை இயக்க மாநிலப் பொருளாளர் சங்கர் இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று பணத்தைத் திருப்பி கொடுக்க வந்த ராஜேந்திரனைப் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வைத்து காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Punjab Polls: காணொலியில் பேரணி நடத்தும் ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.