ETV Bharat / city

ரூ. 20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் என்ன? கமல்ஹாசன் கேள்வி

author img

By

Published : May 17, 2020, 8:23 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து கட்டங்களாக நாட்டு மக்களுக்கும், தொழில்துறையினருக்குமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ. 20 லட்சம் கோடியில் நேரடி பயன் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் கேள்வி
கமல்ஹாசன் கேள்வி

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக என்ன பயன் இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில், “20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு 4.0 - ஊரடங்கும், தளர்வுகளும்!

இதில், முதலமைச்சர் பழனிசாமிக்கு மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை கேட்டுப் பெற தெரியவில்லை. எங்கு கேட்டுவிட்டால், பிரதமர் கோபித்துக் கொள்வாரோ என்று கேட்பதில்லை.

இதனால் மதுக்கடைகளை திறந்து தேவையான நிதியை உயர்த்துகிறது அம்மா பெயரில் இயங்கும் அடிமை அரசு என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.