ETV Bharat / city

'பெண்களே சாதிக்க தவறாதீர்!' - மருத்துவர் சாந்தி

author img

By

Published : Mar 9, 2020, 3:02 AM IST

சென்னை: "ஒரு பெண்ணாக என்னால் இப்போது வரை அனைத்து முடிவுகளும் எடுக்க முடிகிறது. அதேப்போல் இக்கால பெண்களும் சாதிக்க தவறக்கூடாது" என மருத்துவர் சாந்தி ஈ டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'பெண்களே சாதிக்க தவறாதீர்!' - மருத்துவர் சாந்தி
'பெண்களே சாதிக்க தவறாதீர்!' - மருத்துவர் சாந்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் பிரிவான சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி. கும்பகோணத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது பல்வேறு பதவிகள் வகிக்கும் புகழ்பெற்ற பெண் ஆளுமைகளில் ஒருவராவார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நம் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "என் குடும்பத்தில் நான் தான் முதல் மருத்துவர். நான் மருத்துவம் படிக்க, குடும்பத்தாரின் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி முடிவெடுத்தேன். மத்திய அரசில் மருத்துவராக பணியில் சேர்ந்த போதும், நான் தொடர்ந்து படித்துக் கொண்டு தான் இருந்தேன். பின்னர் அரசு வேலையை உதறிவிட்டு, சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தேன். இதில் நான் சம்பாதிக்கவில்லை என்றாலும், எனக்கு பிடித்த பணியை சமூகத்திற்கு ஆற்றுவதில் மன நிம்மதி அடைந்தேன். என்னுடையை ஒவ்வொரு விருப்பு வெறுப்பும் என்னை சார்ந்தாக தான் இருந்தது" என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மகளிர் தின சிறப்புப் பேட்டி - மருத்துவர் சாந்தி

தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் அடுத்தவர்களுடைய வற்புறுத்தலுக்காக தங்களுக்கு பிடிக்காத பணியை செய்ய வேண்டாம். ஒரு நாளேனும் நமக்கென்று நாம் நேரத்தை செலவழிக்க வேண்டும். எல்லா பெண்களும் கல்வி பெறுவதில் சுயசார்புடன் இருக்க வேண்டும். அது மூலம் தான் அவர்கள் பொருளாதர சுயசார்பை பெற முடியும். பெண்கள் அவர்கள் விரும்பிய பணிகளை தேர்தெடுத்து அதில் வெற்றி பெறும் வரை பின் வாங்காமல் இருக்க வேண்டும்" என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார்.

இதையும் படிங்க:

'அன்புதான் அனைத்துக்குமான பதில்... அன்பே வழி...' - சாதனைப் பெண் சஞ்சனா கோயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.