ETV Bharat / city

குறுகிய காலத்தில் கைத்தறித்துறையில் எடுத்த நடவடிக்கைகள் - பட்டியலிட்ட அமைச்சர் ஆர்.காந்தி

author img

By

Published : Nov 25, 2021, 8:47 AM IST

நூல் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவைத் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த அறிக்கைக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி பதிலறிக்கையை விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஆர். காந்தி, handloom minister R Gandhi, handloom minister R Gandhi  handloom minister R Gandhi reply statement to eps
எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி நேற்று (நவ. 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரின் நவம்பர் 24 நாளிட்ட அறிக்கையில் நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது என்றும், இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் பதில் அறிக்கை

ஜவுளித் தொழிலுக்கு மூலப் பொருட்களான பஞ்சு மற்றும் நூல் விலை ஏற்றத்தினை தடுத்தல், இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைத்தல், மூலப்பொருள் ஏற்றுமதியினை தடை செய்தல், நூலுக்கு மானியம் வழங்க நூல் மற்றும் பஞ்சு மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்தல், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு வழங்குதல் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் , மேற்படி அறிக்கையில் ஜவுளித் தொழில் சார்ந்த பல்வேறு புள்ளிவிவரங்களும் திட்டங்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து தமிழ்நாடு அரசால் ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட இந்த அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டவை பின்வருமாறு:

  • தள்ளுபடி மானிய திட்டத்தின்கீழ் கடந்த ஆட்சியில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத் தொகையினை தள்ளுபடி விடுவிக்கப்படாமல், நிலுவையில் இருந்த மானியத் தொகையினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • நடப்பாண்டில் இத்திட்டத்தின் பொருட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ .150 கோடியுடன் , கடந்த ஆட்சியின் நிலுவை தள்ளுபடி மானியத் தொகை ரூ.160.11 கோடியினையும் கூடுதலாக சேர்த்து மொத்தம் ரூ .310.11 கோடி விடுவித்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
  • கைத்தறி நெசவாளர்களின் நெசவுக்கான அடிப்படை கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் ஒட்டுமொத்தமாக உயர்த்தி வழங்க இந்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
  • அடிப்படை கூலியும், அகவிலைப்படியும் ஒரே ஆண்டில் உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 3.67 கோடி அளவிற்கும், பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 75 லட்சம் அளவிற்கும் நடப்பாண்டில் இந்த அரசால் நெசவுக்கு முந்தைய கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
  • கட்டப்பட்ட கடந்த ஆட்சியில் 365 சதுர அடியில் ரூ. 2.60 லட்சம் செலவில் வீடுகளுக்கு பதிலாக நெசவாளர்களுக்கு தலா 365 சதுர அடி பரப்பளவில் தலா ரூ. நான்கு இலட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டு வந்த ஒரு விழுக்காடு விவசாய விற்பனைக் குழு செஸ் வரியினை முழுமையாக ரத்து செய்து இந்த வரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம், நூற்பாலைகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கூட்டுறவு நூற்பாலைகளில் நூற்பாலைகளில் உள்ள cardwires , cots, Aprons போன்ற உதிரி பாகங்களை மாற்றுவதற்கு 2019ஆம் ஆண்டில் அரசாணை எண் .19 .8. விநியோகத்திற்கான உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு, துரிதமாக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர், முதன்மைச் செயலாளர் ஆகியோர் நேற்று முன்தினம் (நவம்பர் 23) தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட நூற்பாலைத் கோயம்புத்தூரில் துறையினருடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, நூல் விலையினை குறைக்கவும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான நூலினை தடையின்றி வழங்கவும் நூற்பாலைகள் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • இதுகுறித்து ஒன்றிய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் நவம்பர் 18ஆம் தேதியன்று பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு மற்றும் பதுக்கலை தவிர்க்குமாறு நூற்பாலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் , ஒட்டுமொத்த ஜவுளி தொழிலை பாதுகாக்கும் வகையில் நூல் விலையினை கட்டுக்குள் வைக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பினை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Srilankan Tamil Refugees: உதவிகள் செய்ய நடவடிக்கை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.