ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : May 25, 2021, 5:17 PM IST

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

'18+ க்கு தடுப்பூசி: அறிவித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துங்கள்' - கே எஸ் அழகிரி

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை பிரதமர் மோடி முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: 5 பேருக்கு சம்மன்

பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர் உள்பட 5 பேரை வரும் ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

விசாகப்பட்டினம் இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்டுள்ள விபத்தில் தீ வானுயர கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்து பாதிப்பு, உயிரிழப்பு குறித்து தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் சீனிவாசனின் மறைவு, மருத்துவ உலகிற்கு பேரிழப்பு என மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள்: ஹைதராபாத்திலிருந்து சென்னை வருகை

சென்னை: ஹைதராபாத்திலிருந்து 50 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

6 மாவட்டங்களுக்கு மழை அலெர்ட்

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்குத் தப்பியோடிய வைர வியாபாரி ’மெகுல் சோஸ்கி’ காணவில்லை!

பிரபல நகை வியாபாரி மெகுல் சோஸ்கியை ஆன்டிகுவா நாட்டில் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பரபரப்புத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மருத்தவமனையில் அனுமதி

கரோனா பாதிப்பிற்குள்ளான மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டசாரியா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி ரசிகர்களுக்கு விடுத்த அன்பிற்குரிய வேண்டுகோள்!

சென்னை: நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நம்மையும் காப்போம்...! நாட்டையும் காப்போம்...! நடிகை கீர்த்தி சுரேஷ்

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கரோனா வைரஸ் தொற்றை வெல்வோம், மக்களைக் காப்போம் என, நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.