ETV Bharat / city

திமுக ஆன்மீக அரசு: தருமபுரம் ஆதீனம்

author img

By

Published : Apr 27, 2022, 1:06 PM IST

திமுக ஆன்மீக அரசு என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஆதீனங்கள் பேட்டி
ஆதீனங்கள் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், துலாபார ஆதீனம், அவிநாசி மடாதிபதி, மலையப்ப ஆதீனம் உட்பட 11 ஆதினங்கள், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மே 5 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவதாம் நடைபெற உள்ள நிலையில், அறநிலையத்துறை திட்டங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், "தெய்வீகப்பேரவை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களை உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். திருக்குவளையில் மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். இந்த அரசு ஆன்மீக அரசு" என்றார்.

ஆதீனங்கள் பேட்டி

குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசுகையில், "தஞ்சாவூரில் எதிர்பாராமல் நடந்த விபத்து அனைவரின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை ஜனநாயகப்பூர்வமாக செயல்படுகின்றது. சட்ட வரையறைக்குட்பட்டு செயல்படுகிறார்கள்" என்றார்.

மேலும் தலைமை செயலகம் வாயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒ.பன்னீர்செல்வத்தையும் ஆதீனங்கள் சந்தித்துப் பேசினர்.

இதையும் படிங்க: திருச்சி சமயபுரம் சித்திரை திருவிழா நிறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.