ETV Bharat / city

'அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் சினிமாவை காப்பாற்றுங்கள்' - ரஜினியை சீண்டிய பிரபல இயக்குநர்

author img

By

Published : Aug 29, 2019, 10:29 AM IST

சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்றுவதற்கு முன் நம்மை காப்பாற்றிய சினிமாவை காப்பாற்றுங்கள் என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார்.

"அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்றுவதற்கு முன் நம்மை காப்பாற்றிய சினிமாவை காப்பாற்றுங்கள்" - இயக்குநர் உதயகுமார் பேச்சு

சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எவனும் புத்தனில்லை' திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், 'இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் சினிமா தான். ஆனால் சினிமா இன்று பல பிரச்னையை சந்திக்கிறது. இதற்கு காரணம் குடும்பமாக இருந்த சினிமா தற்போது வியாபாரமாக மாறிவிட்டது. இன்னும் நம்மிடத்தில் தீரன் சின்னமலை, மருதநாயகம் உள்ளிட்ட பல கதைகள் உள்ளன. ஆனால் இதை படமாக தயாரிக்க சிஸ்டம் சரியில்லை. சிஸ்டத்தை சரிசெய்ய வருபவர்களும் திருடர்களாக இருக்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்றுவதற்கு முன் நம்மை காப்பாற்றிய சினிமாவை காப்பாற்றுங்கள்' என்றார்.

'எவனும் புத்தனில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு

தொடர்ந்து பேசிய அவர், 'திரையரங்குகளில் பாப்கான், காபி போன்றவற்றை விற்பதில் நமக்கும் ஒரு பங்கு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நம்முடைய படத்தை பார்க்க வரும்போது தானே ரசிகர்கள் பாப்கார்ன் போன்றவற்றையும் வாங்குகிறார்கள். அந்த காலத்தில் ஹாலிவுட் படம் எடுத்த இயக்குநர்களுக்கு இன்றளவும் ராயல்டி பணம் செல்கிறது.

இன்றளவும் சிங்கார வேலன், சின்னகவுண்டர் படங்கள் வாரம் தோறும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அவ்வாறு ஒளிபரப்பும் போது ராயல்டி கிடைத்தால் நன்றாக இருக்கும். அதை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுகூடி பேச முன்வர வேண்டும். மிகப் பிரபலமான நடிகர்கள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து சம்பளத்தை வரைமுறைப்படுத்தினால் திரையுலகத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்' என்று தெரிவித்தார்.

Intro:கட்சிகள் துவங்கி நாட்டை காப்பாற்ற வேண்டாம் முதலில் உங்களை வளர்த்த சினிமாவை காப்பாற்றுங்கள் ஆர் பி உதயகுமார் பேச்சுBody:எவனும் புத்தன் இல்லை படத்தின் இசை வெளியீட்டு விழா

இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' எவனும் புத்தனில்லை' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி , ஆர்.வி.உதயகுமார், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விழாவில் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா இன்று பிரச்சனையை சந்திக்க காரணம் மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது.

தீரன் சின்னமலை , மருதநாயகம் உள்ளிட்ட பல கதைகள் உள்ளன ஆனால் எடுக்க சிஸ்டம் சரியில்லை சிஸ்டத்தை சரிசெய்ய வருபவர்களே திருடர்களாக இருக்கிறார்கள். அரசியல் கட்சி ஆரம்பித்து நாட்டை காப்பாற்ற வேண்டாம் வேண்டாம் முதலில் முதலில் சினிமாவை காப்பாற்றுங்கள்

சினிமா எல்லோரையும் ஈர்க்கிறது ஆனால் காப்பாற்ற இயலாத சூழலில் சினிமா உள்ளது

இதற்கு தியேட்டர் வருமானத்தை விட்டுவிடுவோம் , பாப்கான் காபி விற்பதில் நமக்கும் ஒரு பங்கு கிடைத்தால் நன்றாக இருக்கும், நம்மபடத்தை பார்க்கும் போது தானே பாப்கார்ன் வாங்குகிறார்கள் இதை நாம் புத்தனகாக கேட்காமல் அடித்து கேட்க வேண்டும்

அந்த காலத்தில் ஹாலிவுட் படம் எடுத்த. இயக்குனர்களுக்கு இன்றளவும் ராயல்டி பணம் செல்கிறது.

சிங்கார வேலன் , சின்னகவுண்டர் படங்கள் வாரம் தோறும் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்படுகிறது. அவ்வாறு ஒளிபரப்பும் போது ராயல்டி கிடைத்தால் நன்றாக இருக்கும் ராயல்டி தொகை நமக்கு கிடைக்க வழிவகை செய்ய அனைவரும் ஒன்றுகூடி செயல்படுத்த வேண்டும் நாங்கள் இதற்காக மத்திய அரசிடம் பேச தயார் எங்களுடன் வர யார் தயாராக உள்ளார்கள்?

பெரிய நடிகர்கள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து சம்பளத்தை வரைமுறைப்படுத்தினால் திரை உலகத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் ஹாலிவுட் தரத்தில் இங்கேயே படத்தை உருவாக்க முடியும்

இன்றைக்கு பத்திரிக்கை யாளரை வெயிலில் காக்க வைக்கிறார்கள் ஆனால் பல மணி நேரம் கழித்து நடிகர்கள் வருகிறார்கள் இப்படி இருந்தால் சினிமா எப்படி உருப்படும் .

குடும்பமாக இருந்த சினிமா இப்போது வியாபாரமாக மாறிவிட்டது சினிமாவுக்கு முதல் எதிரி கேரவன் வண்டிதான்

Conclusion:எஜமான் டத்தில் தென்னை ஓலை போட்டு கீழே படுத்து தூங்கியவர் தான் ரஜினி கமலைப் போன்ற சிறந்த நடிகர் இங்கு யாரும் இல்லை இவர்கள் அனைவரும் ஒன்று கூடி பேசினால் மட்டுமே திரை உலகத்தை காப்பாற்ற முடியும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.