ETV Bharat / city

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

author img

By

Published : Jun 5, 2021, 4:47 PM IST

கரோனா இரண்டாவது அலையின் போது நடைபெறும் சம்பவங்கள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கண்டு பொறுப்புள்ள குடிமகன்களும் வேதனைப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

இதுதொடர்பாக Panacea Biotec. நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு நீதிபதிகள் மன்மோகன், நஷ்மி வஷிரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நாட்டில் கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி கிடைக்காமல் ஒவ்வொருவரும் அவதிப்பட்டு வருவதாகவும், டெல்லி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரஷயாவை சேர்ந்த நிறுவனம் மருந்து தயாரிக்க இமாச்சல பிரதேசத்தில் உள்கட்டமைப்பை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்த நீதிபதிகள், ஆனால் ஒன்றிய அரசால் முடியவில்லை என்றும் கூறினர்.

கரோனா இரண்டாவது அலையில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரம் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது மிகுந்த வேதனை அடைவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பொறுப்புமிக்க ஒவ்வொரு குடிமகனும் வேதனை அடைவார்கள் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், பானேசியா பயோடெக் நிறுவனத்திற்கு சுமார் 14 கோடி ரூபாய் வட்டி பணத்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இடைக்கால ஏற்பாடாக விற்பனை வருமானத்தில் 20 சதவீதத்தை நீதிமன்ற பதிவேட்டில் டெபாசிட் செய்ய அந்நிறுவனத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி தயாரிக்க Panacea Biotec நிறுவனம் இந்த தொகையை பயன்படுத்தக்கூடும் என்றும், அதனை தயாரிக்க அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

Panacea Biotec நிறுவனம் தனது மனுவில், நிலுவை தொகை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதுதொடர்பாக 2020 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட உத்தரவை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.