ETV Bharat / city

அதிகரிக்கும் கரோனா!- மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

author img

By

Published : Apr 20, 2022, 11:20 AM IST

இந்தியாவில் வட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கரோனா!- மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு
அதிகரிக்கும் கரோனா!- மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

சென்னை: கரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லியில் ஏப்ரல் 4 ந் தேதி 82 பேருக்கு இருந்த கரோனா பாதிப்பு 19 ந் தேதி 632 என 5 மடங்கு அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மாற்றமின்றி குறைந்து வரும் கரோனா பாதிப்பு 8 மாவட்டங்களில் 25 முதல் 30 வரையில் ஒரு சில இடங்களில் பதிவாகி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் , பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்: பொது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கும், மருத்துவமனை போன்றவற்றுக்குச் செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 40 லட்சம் பேரும், 2ம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 37 லட்சம் பேரும் போட்டுக்கொள்ளவில்லை. மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. ஆனாலும் ​​பல்வேறு சுகாதார நிலையங்களில் உருவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட வசதிகள், உபகரணங்களுக்கு உடனடித் தேவை இல்லாவிட்டாலும் பராமரிக்கப்பட்டு செயல்படுத்த தயார் நிலையில் வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா மரபணு பரிசோதனை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்வதை அதிகரிக்க வேண்டும். ஒமைக்கரான் வைரஸ் தொற்று 93 நோயாளிக்கும், பிஏ2 ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று பாதிப்பும் இருக்கிறது. எனவே மரபணு மாற்றம் அடைந்துள்ளதா என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்தால் தவிர உடனடி கவலைகொள்ளத் தேவையில்லை என்று நிபுணர்கள் தொடர்ந்து கூறினாலும், பொதுச் சுகாதாரத்தில் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது நல்லது. கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, எந்த ஒரு வேகத்தையும் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுவதை உறுதிசெய்து, கோவிட் பாதிப்புகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைத் தொடரவும் என ராதாகிருஷ்ணன் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவில் தற்போதைய கரோனா நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.