ETV Bharat / city

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்!

author img

By

Published : Oct 28, 2021, 10:17 PM IST

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம்
ந கெளதமன்

சென்னை: தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் 1974ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மீனவர்களின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது.

இக்கழகம் சாத்தனூர், பவானிசாகர், ஆழியார், அமராவதி, திருமூர்த்தி மற்றும் உப்பார் நீர்த்தேக்கங்களில் மீன்வள மேலாண்மையையும், மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பணிகளையும் மேற்கொண்டுவருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நடமாடும் கடல் மீன் உணவகங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக சென்னை இராயபுரத்தில் பயிற்சி மைய வசதி, சேத்துப்பட்டில் அமைந்துள்ள மீன்பிடி விளையாட்டுடன் கூடிய பசுமைப் பூங்கா பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளையும் நிர்வகித்து வருகிறது.

இக்கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ந. கௌதமன்., நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் பிறந்தவர்.

கடந்த 25 ஆண்டுகளாக மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கண்டவர். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைகளைக் களையும் பொருட்டு, அரசு தரப்பில் அமைத்த குழுவில் இவர் இடம் பெற்று, இலங்கை சென்று அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டவர்.

மேலும், இவர் 2006 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நகர் மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கை தமிழர்களின் நலன் காக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.