ETV Bharat / city

சென்னை டூ கேவடியா : ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில்!

author img

By

Published : Jan 16, 2021, 4:54 AM IST

சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வல்லபாய் படேல் சிலை அருகே அமைக்கப்பட்டு கேவடியா ரயில் நிலையத்திற்கு ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை டூ  கேவடியா : ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில்!
சென்னை டூ கேவடியா : ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில்!

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, கேவடியா என்ற கிராமத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கும் பிரதமர் மோடி, காணொளிக் காட்சி வழியே அங்கிருந்து நாட்டின் 8 முக்கிய நகரங்களுக்கு புதிய வாராந்திர ரயிலை தொடங்கிவைக்க இருக்கிறார்.

இந்த புதிய வாராந்திர ரயில்களில் சென்னை- கேவடியா இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ள வாராந்திர ரயிலும் ஒன்றாகும்.

சென்னை டூ  கேவடியா : ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில்!
சென்னை டூ கேவடியா : ஜன.17 ஆம் தேதி முதல் புதிய வாராந்திர சிறப்பு ரயில்!

சென்னை- கேவடியா இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வாராந்திர ரயில் சேவை (20919/20920) சிறப்பு ரயிலாக இயங்க உள்ளது.

சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில் நிலையத்தில் இருந்து வாரம்தோறும் புதன்கிழமை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு சென்னைக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேரும். மறுமார்க்கத்தில் வண்டி கேவடியா ரயில் நிலையத்தில் இருந்து வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து ரேணிகுண்ட, கடப்பா, ராய்ச்சூர், புனே, கல்யாண், வடோதரா வழியாக கேவடியா ரயில் நிலையத்தை இந்த புதிய வாராந்திர ரயில் சென்றடையும் என்று தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : 23 தமிழ்நாடு பேருந்துகளை பறிமுதல் செய்த ஆந்திரப் பிரதேச அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.