ETV Bharat / city

வெளிநாட்டு கடற்கரைகளைப்போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த நடவடிக்கை தீவிரம் - சென்னை துணை மேயர்

author img

By

Published : Apr 21, 2022, 7:14 PM IST

வெளிநாட்டு கடற்கரைகளைப்போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த முதலமைச்சரின் கனவுத் திட்டமான ' ப்ராஜெக்ட் ப்ளூ ' திட்டம் அமல்படுத்தப்படுகிறது என சென்னை துணை மேயர் மகேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு  கடற்கரைகளைப்  போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த நடவடிக்கை தீவிரம் - துணை மேயர்
வெளிநாட்டு கடற்கரைகளைப் போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த நடவடிக்கை தீவிரம் - துணை மேயர்

சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்த 'ப்ராஜெக்ட் ப்ளூ' திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரையில் உள்ள கழிவறை, நடைமேடை, பூங்காக்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார். மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்று ரசிக்கும் விதமாக கடற்கரை மணல்வெளியில் அமைக்கப்படவுள்ள நிரந்தரப்பாதை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார்,

"வெளிநாட்டு கடற்கரைகளைப் போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த முதலமைச்சரின் கனவுத் திட்டமான 'ப்ராஜக்ட் ப்ளூ' திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மெரினாவில் உள்ள கழிவறை, குடிநீர் இணைப்புகள், பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்படவுள்ள நிரந்தரச்சாலை குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மெரினா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட உள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் நிரந்தர சாலையாக மரப்பாதை அமைக்க 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்த அவர் ''சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை கண்டறிந்து அவற்றைத் துண்டிப்போம்.

இதுபோன்று செய்யும் தனி நபர்களையும், நிறுவனங்களையும் ஓரிரு முறை எச்சரிப்போம். அதன் பின்னர் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் மாடுகளை வளர்ப்போர் குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அவற்றை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மூலம் இட வசதி ஏற்படுத்தித் தரப்படும் " என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.