ETV Bharat / city

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்

author img

By

Published : Dec 16, 2019, 5:39 PM IST

சென்னை: குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்தும் சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக் களமாகி உள்ளன. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அங்கு போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவிவருகிறது. கல்லூரிகளுக்கு காலவரம்பின்றி விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐஐடியில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் திடீரென இன்று போராட்டம் நடத்தினர்.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் காவல் துறை நடத்திய தாக்குதலுக்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தின்போது மாணவர்கள் மத்திய அரசுக்கும் டெல்லி காவல் துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட நகல்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனைத்தொடர்ந்து ஐஐடி வாளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் தடையையும் மீறி பேரணியாகச் சென்றனர். இதனால், சென்னை ஐஐடி வாளாகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்

இதையும் படிங்க: டெல்லிக்கு ஆதரவாகக் களமிறங்கிய சென்னை...!

Intro:குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக
சென்னை ஐஐடியில் போராட்டம் Body:


குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக
சென்னை ஐஐடியில் போராட்டம்
சென்னை,

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை ஐஐடியில் குடியுரிமை சட்டத்திருத்தை எதிர்த்து மாணவர்கள் திடிர் என போராட்டம் நடத்தினர். ஐஐடியில் மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தவர்கள் மறுத்தனர்.

ஆனாலும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், அலிகார் பலகலைக்கழக மாணவர்கள் மீதும் காவல்துறை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் சென்னை ஐ ஐ டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மாணவர்கள் மத்திய அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் நகல்களையும் தீயிட்டு கொளுத்தினர்.அதனை தொடர்ந்து ஐஐடி வாளாகத்திற்குள் பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை பாதுகாப்பு காவலர்கள் தடுத்தனர். அதையும் மீறி மாணவர்கள் நடந்து சென்றனர். மாணவர்களின் பேரணியை வீடியோ எடுக்க சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கோரிக்கைக்காக போராடுவதற்கும் ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனாலும் மாணவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், டெல்லி காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கவுசிக் கூறும்போது, குடியுரிமைச்சட்டத்திருத்தம் இந்தியாவை பிளவுப்படுத்துவதாக உள்ளது.எனவே அதனை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு இந்த சட்டத்தினை திரும்ப பெறும் வரையில் மாணவர்களின் போராட்டம் தொடரும். இந்தியாவை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

மாணவிகள் ஆக்ரோஷமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குழந்தையுடன் ஆராய்ச்சி மாணவி ஒருவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.



visuval 3 G live Pack

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.