ETV Bharat / city

229 டன் அம்மோனியம் நைட்ரேட் 12 கண்டெய்னர்களில் ஹைதராபாத் புறப்பட்டன!

author img

By

Published : Aug 11, 2020, 7:56 AM IST

Updated : Aug 11, 2020, 12:00 PM IST

சென்னை மணலியிலுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணி இரண்டாம் கட்டமாக தீவிரமாக நடைபெறுகிறது.

chennai ammonium nitrate evoque
chennai ammonium nitrate evoque

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 2015ஆம் ஆண்டு 740 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது.

இதையடுத்து துறைமுக சுங்கத்துறை அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து மணலியில் உள்ள வேதிப்பொருள் கிடங்கில் பாதுகாப்பாக வைத்தனர். அவற்றில் 43 டன் அமோனியம் நைட்ரேட் வெள்ளம், ஆவியாதல் காரணமாக வீணானது. தற்போது 697 டன் மீதமுள்ளது.

இந்த நிலையில் லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நிகழ்ந்த பெரும் விபத்தின் எதிரொலியாக, மணலியில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள 697 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை, கிடங்கில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.

ஏற்கனவே அம்மோனியம் நைட்ரேட்டை 2, 3 நாள்களில் அப்புறப்படுத்தும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 9ஆம் தேதி முதற்கட்டமாக தகுந்த பாதுகாப்புகளுடன் 10 கன்டெய்னர்கள் ஹைதராபாத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்பட்ட போது
அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்பட்ட போது

அதையடுத்து இன்று (ஆக.11) இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அலுவலர்கள், 12 கண்டெய்னர் லாரிகள் மூலம் 229 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தனர்.

சாலை வழியாக அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 கண்டெய்னர்கள் அடுத்த சில நாள்களில் அனுப்பிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீதமுள்ள அமோனியம் நைட்ரேட் 3 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் - காவல் ஆணையர்

Last Updated : Aug 11, 2020, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.