ETV Bharat / city

நளினி, முருகனை பேச அனுமதிக்க முடியாது - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

author img

By

Published : May 28, 2020, 2:13 PM IST

Updated : May 28, 2020, 2:48 PM IST

சென்னை: சிறை விதிகளின்படி நளினி, முருகனை வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

murugan
murugan

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் காணொலி அழைப்பில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்றும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

மேலும், காலமான தனது தந்தையின் உடலை காணொலி அழைப்பு மூலம் பார்க்க முருகனுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடைசெய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால், இது மத்திய வெளி விவகாரத் துறை சம்பந்தப்பட்டது என்றும், எனவே இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

Last Updated : May 28, 2020, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.